இந்தியக் கடற்படை தளவாடப் பொருட்கள் மேலாண்மை சேவை மற்றும் இந்தியக் கடற்படை ஆயுதப் பணிகளின் பயிற்சி அதிகாரிகள் இன்று (2025 மார்ச் 17, 2025) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புவி அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நாடுகள் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், கூட்டுப் பயிற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாகக் கூறினார். உலக அரங்கில் இந்தியா ஒரு பெரிய பங்கை ஆற்றி வருவதால், கடற்படைத் தளவாடப் பொருட்கள் மேலாண்மைப் பணி அதிகாரிகள் மற்றும் கடற்படை ஆயுத தளவாடப் பணி அதிகாரிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் திறன்வாய்ந்த நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கடற்படையில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகெங்கிலும் ஏற்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து தங்களது அறிவைத் தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் ஆலோசனை வழங்கினார். சரக்கு மேலாண்மை மற்றும் சேவை விநியோக முறையை தடையற்றதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற புதுமையான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். தேசத்திற்கும், கடற்படையின் சேவைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்தியக் கடற்படைக்கு சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் தேச கட்டமைப்பிற்கு இந்த அதிகாரிகள் முக்கியப் பங்காற்றுவதாகக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
திவாஹர்