இந்தியாவின் ஐந்து உறுதிமொழிகள் மற்றும் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப மத்திய நிலக்கரி அமைச்சகம் நீடித்த நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.
பசுமை முயற்சிகள் – உயிரி மீட்டுருவாக்கம் / மரக்கன்று நடுதல்: நிலக்கரி / பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சுரங்கங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்டுருவாக்கம், காடு வளர்ப்பு போன்ற தொடர் நடவடிக்கைகள் மூலம் கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எரிசக்தி திறன் நடவடிக்கைகள்: நிலக்கரி / பழுப்பு நிலக்கரி சம்பந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக எரிசக்தி சேமிப்பு, செயல்திறன் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வழக்கமான விளக்குகளை பயன்படுத்துவதற்கு மாற்றாக எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துதல், எரிசக்தி திறன் கொண்ட குளிர் சாதன வசதிகள், நவீன மின்விசிறிகளை நிறுவுதல், மின்சார வாகனப் பயன்பாடு, திறன்மிக்க வாட்டர் ஹீட்டர்களை நிறுவுதல், நீர் இறைப்பான்களுக்கு எரிசக்தி திறனுள்ள மோட்டார்களை பொருத்தல், தெரு விளக்குகளில் தானியங்கி நேர கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துதல் போன்றவை அடங்கும்.
பசுமை கடன் திட்டம்: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் தொடங்கியுள்ள பசுமைக் கடன் திட்டத்தின் கீழ், நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்று வருகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
திவாஹர்