தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான இரண்டு வார கால ஆன்லைன் வழி உள்ளகப் பயிற்சித் திட்டம் நிறைவடைந்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான  இரண்டு வார கால ஆன்லைன் உள்ளகப் பயிற்சித் திட்டம் நிறைவடைந்தது. 2025 மார்ச் மாதம் தொடங்கிய இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தில், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மற்றும் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் 67 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தனர்.

நிறைவு விழாவில் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, பயிற்சி முடித்தவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மனித உரிமைகளில் ஆர்வமுள்ள தனிநபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கடுமையான முயற்சியை வலியுறுத்திய அவர், திட்டத்தின் கடுமையான தேர்வு செயல்முறையை எடுத்துரைத்தார். மாணவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களாகக் கற்றுக்கொள்ளவும், வளரவும், பிரகாசிக்கவும் உதவும் ஒரு அடித்தள பாடமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கற்றலில் ஈடுபட்ட அவர்களின் உறுதிபாட்டிற்காக தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும்,  பாதுகாப்பதிலும் உலகளவில் மனித உரிமைகள் அமைப்புகள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டிய நீதிபதி சாரங்கி, மனிதசமூகத்திற்கு சேவை செய்ய புதிதாக பெற்ற அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சியாளர்களை ஊக்குவித்தார்.

Leave a Reply