மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் திரு ரூபன் பிரெக்கல்மன்சை சந்தித்தார். இருநாடுகளிடையே பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் விவகாரம், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
கப்பல் கட்டுதல், உபகரணங்கள் மற்றும் விண்வெளித் துறைகளில் ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள், திறன்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துதல் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் போன்ற களங்களில் இணைந்து பணியாற்றுவது, அந்தந்த பாதுகாப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை இணைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
நெதர்லாந்துடனான தனது பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆவலுடன் உள்ளதாக இந்தச் சந்திப்புக்குப் பிறகு சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்