ஒரு கோடி டன் நிலக்கரி உற்பத்தி: நாட்டின் எரிசக்தி எதிர்காலத்தை வலுப்படுத்துதல்.

2024-25-ம் நிதியாண்டில் 2025 மார்ச் 20-ம் தேதி  நாட்டின் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன் அளவை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை கடந்த நிதியாண்டின் நிலக்கரி உற்பத்தியான 997.83 மில்லியன் டன் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு 11 நாட்களுக்கு முன்னதாகவே எட்டப்பட்டுவிட்டது. இது எரிசக்தி தேவைகளை பூர்த்தி  செய்வதிலும், தொழில்துறை, விவசாயம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நிலக்கரித் துறையின் வெற்றிக்கு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், 350-க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத பணிகளே காரணம் ஆகும்.

நாட்டின் எரிசக்தித்துறை 55% நிலக்கரி பயன்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 74 சதவீதம் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நிலக்கரியின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Leave a Reply