இந்தியா-இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 13வது கூட்டம் ரோமில் நிறைவடைந்தது.

இந்தியா-இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 13வது கூட்டம்  2025 மார்ச் 20-21 வரை இத்தாலியின் ரோமில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின்  துணைத் தலைவர் மற்றும் இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தாலிய பாதுகாப்புப் பொதுப் பணியாளர்களின் ராணுவ ஒத்துழைப்புப் பிரிவின் துணைத் தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இருதரப்பு ராணுவத்தை மையமாகக் கொண்ட ஒத்துழைப்பின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளை அடையாளம் காண்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. மேம்படுத்தப்பட்ட பரிமாற்ற திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இந்திய மற்றும் இத்தாலிய ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றன.  இக்கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் தற்காப்பு ஈடுபாடுகள், அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்காலத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தக்குழு  இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நிறுவன பொறிமுறையாக செயல்படுகிறது, மேலும் வலுவான ராணுவ ஈடுபாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்க்கிறது..

Leave a Reply