மிசோரமில் இருந்து சிங்கப்பூருக்கு முதன்முதலாக அந்தூரியம் பூக்கள் ஏற்றுமதி.

இந்தியாவின் மலர் வளர்ப்பு ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, குறிப்பாக வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து , வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் , மிசோரம் அரசின் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, சிங்கப்பூருக்கு  மலர்களை வெற்றிகரமாகக் ஏற்றுமதி செய்துள்ளது.

வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு அபிஷேக் தேவ் மற்றும் மிசோரம் தோட்டக்கலைத் துறையின் சிறப்புச் செயலர் திருமதி. ராம்டின்லியானி, மிசோரமில் இருந்து சிங்கப்பூர் வரையிலான அந்தூரியம் பூக்களின் முதல் சரக்கு ஏற்றுமதியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

50  அட்டைப் பெட்டிகளில் நிரம்பிய 1,024 அந்தூரியம் கட் பூக்கள் (70 கிலோ எடையுள்ள) அடங்கிய இந்தச் சரக்கு ஐவிசி அக்ரோவெட் நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மிசோரமில் பயிரிடப்படும் மிக முக்கியமான பூக்களில் அந்தூரியம் ஒன்றாகும், இது உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக பெண்கள் உட்பட விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. மலர் வளர்ப்பு உள்ளூர் சமூகங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. மிசோரம் ஆண்டுதோறும் “அந்தூரியம் திருவிழா” நடத்துகிறது, இது சுற்றுலாவை மேம்படுத்துகிறது. மேலும் பூவின் அழகு மற்றும் அலங்கார மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.

2024 டிசம்பர் 6 அன்று ஐஸ்வாலில் மிசோரம் அரசுடன் இணைந்து வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த சர்வதேச மாநாட்டில்  வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பின் வெற்றியைத் தொடர்ந்து மிசோரமிலிருந்து சிங்கப்பூருக்கு அந்தூரியம் பூக்கள் முதன்முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 24 உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுடன் சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் , நேபாளம், ஜோர்டான், ஓமன், அஜர்பைஜான், ரஷ்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஒன்பது சர்வதேச வாங்குபவர்களின் பங்கேற்பை இந்த மாநாடு கண்டது. இந்த நிகழ்வு மிசோரமின் மலர் வளர்ப்புத் தயாரிப்புகளுக்கான முக்கியமான வர்த்தக தொடர்புகளையும் சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்தியாவின் மலர் வளர்ப்பு ஏற்றுமதி 2023-2024 நிதியாண்டில் 86.62 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. மிசோரம் முதல் சிங்கப்பூர் வரையிலான அந்தூரியம் பூக்களின் இந்த முதல் சரக்கு, குறிப்பாக வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து மலர் வளர்ப்பு ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. NER தோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்பு பொருட்களின் ஏற்றுமதிக்கான அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இந்த திறனை ஆதரிப்பதில் APEDA உறுதியாக உள்ளது.

வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) என்பது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். APEDA இன் நோக்கம், இந்தியாவில் இருந்து விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல், எளிதாக்குதல் மற்றும் ஊக்குவிப்பது, உலகளாவிய உணவு மற்றும் பானத் துறையில் நாட்டின் தடத்தை வலுப்படுத்துவதாகும்..

Leave a Reply