மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. மனோகர் லால், புவனேஸ்வரில், ஒடிசா மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் மாநிலத்தின் மின்சாரத் துறையின் வளர்ச்சி குறித்த விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
திறன் அதிகரிப்பு, மின் பகிர்மான உள்கட்டமைப்பு மற்றும் மின் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தின்போது, சாம்பல் பயன்பாட்டு இலக்குகளை அடைவது குறித்து பேசிய திரு மனோகர் லால், நிலக்கரி, சுற்றுச்சூழல், ரயில்வே அமைச்சகங்களுடன் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, சாம்பலை நீண்ட தூரம் கொண்டு செல்ல போதுமான ரயில் ரேக்குகள் வழங்குவது உட்பட இப்பிரச்சினையை விரிவாகக் கையாள்வதாக உறுதியளித்தார்.
வளர்ந்து வரும் மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய மாநில அரசு, ஒடிசாவில் தற்போது 20 ஜிகாவாட் செயல்பாட்டு நிலக்கரி அடிப்படையிலான வெப்ப மின் திறன் உள்ளதாகக் குறிப்பிட்டது. கூடுதலாக 10 ஜிகாவாட் திட்டநிலையில் உள்ளது, இது அடுத்த 5-6 ஆண்டுகளில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் மின் பகிர்மான நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள் உட்பட ஒடிசாவில் மேலும் பல சுரங்க முனை அனல் மின் நிலையங்களை உருவாக்க மத்திய அமைச்சர் ஊக்குவித்தார்.
எம்.பிரபாகரன்