அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவது முன்பு புதிய நிலக்கரி விநியோகக் கொள்கை – 2007 மூலம் நிர்வகிக்கப்பட்டது. மின்சாரத் துறைக்கான தேசிய மொத்த உற்பத்தி திட்டத்தின் நிலக்கரி இணைப்புக்கான விதிமுறைகளுக்குப் பதிலாக, மின்சக்தி கொள்கை 2017 அமல்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி நிறுவனங்களுக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இந்தக் கொள்கைகளின் கீழ் நிலக்கரி வழங்கப்படுகிறது.
மின்சாரத் துறை உட்பட அனைத்துத் துறைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒற்றைச் சாளர மின்னணு ஏலத்தின் கீழ் நிலக்கரி நிறுவனங்களால் நிலக்கரி விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு நிலக்கரி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரி உற்பத்தியை நாடு கண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தி 997.826 மில்லியன் டன் (MT) ஆகும். நடப்பு 2024-25 ஆம் ஆண்டில், நாடு 929.15 மெட்ரிக் டன் (தற்காலிக தரவு) நிலக்கரியை (பிப்ரவரி, 2025 வரை) உற்பத்தி செய்துள்ளது, இது கடந்த 2023-24 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 881.16 மில்லியன் டன்னாக இருந்தது. இது 5.45% வளர்ச்சி விகிதமாகும்.
நாட்டில் போதுமான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யவும், நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திவாஹர்