வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம் (NEIAH) மேகாலயாவில் தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வை நடத்தியது.

இந்தியாவின் மிகவும் வியக்கத்தக்க இயற்கை அதிசயங்களில் ஒன்றான  மேகாலயாவில் உள்ள ‘டபுள் டெக்கர் லிவிங் ரூட் எனப்படும் விழுதுகளால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் யோகா நிகழ்வு நடைபெற்றது. மூடுபனி, மலைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால மர வேர்கள்  ஆகியவற்றின் பின்னணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி நிறுவனம், சர்வதேச யோகா தினத்தையொட்டி முன்கூட்டிய நிகழ்வாக இந்த யோகா நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் யோகாவின் நன்மைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின்  இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பழமையான பாலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு ஆசனத்திலும், ஒரு செய்தி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதாவது யோகா அறைகளுக்குள் செய்யப்படும் பயிற்சி மட்டுமல்லாமல், இயற்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பயிற்சி என்பதே அந்த செய்தி.

Leave a Reply