உள்நாட்டு திறன்களை மேம்படுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல், விநியோகச் சங்கிலித் தொடர்களை பன்முகப்படுத்துதல், இறக்குமதிக்கான மாற்று ஆதாரங்களைக் கண்டறிதல் மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் தொடங்குவதை எளிதாக்கவும் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
ஏப்ரல் 01, 2023 முதல் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, இந்தியாவை உலகச் சந்தையில் மிகவும் திறம்பட ஒருங்கிணைக்கவும், வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்தவும், நம்பகமான வர்த்தக கூட்டு நாடாக நிறுவவும் உதவும்.
ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 65 ஏற்றுமதி உதவி மையங்கள் நிறுவுப்படுகிறது.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஏற்றுமதிக்கான வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் சந்தை அணுகல் முயற்சிகள் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலம் உதவி வழங்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்