காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகி விட்டது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகி விட்டது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர், மோடி அரசின் ஒருங்கிணைக்கும் கொள்கைகள் ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதத்தை அகற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஹூரியத்துடன் தொடர்புடைய இரண்டு அமைப்புகள் பிரிவினைவாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதென அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், இதுபோன்ற அனைத்து குழுக்களும் முன்வந்து பிரிவினைவாதத்தை உடனே கைவிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் திரு அமித் ஷா கூறினார். வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply