தேர்தல் ஆணையம் முதன்முறையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கியது.

புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷியுடன் இணைந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான (பிஎல்ஓ) முதலாவது பயிற்சியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். சராசரியாக 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பி.எல்.ஓ வீதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.க்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்படும். நன்கு பயிற்சி பெற்ற இந்த பி.எல்.ஓ.க்கள் நாடு முழுவதும் உள்ள பி.எல்.ஓ.க்களின் முழு வலையமைப்பையும் வலுப்படுத்த சட்டப் பேரவை அளவிலான முதன்மை பயிற்சியாளர்களின் அமைப்பை உருவாக்கும். இது 100 கோடி வாக்காளர்களுக்கும், ஆணையத்திற்கும் இடையிலான  முதலாவது மற்றும் மிக முக்கியமான தொடர் அமைப்பாகும்.

இந்தத் தனித்துவமான திறன் மேம்பாட்டுத் திட்டம் முதலில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில்  செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 109 பி.எல்.ஓ.க்கள், பீகார், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 24 தேர்தல் பதிவு அதிகாரிகள் (ஈஆர்ஓ) மற்றும் 13 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இந்த 2 நாள் உள்ளகப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, வாக்காளர் பதிவு விதிகள் 1960 மற்றும் அவ்வப்போது  ஆணையத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நன்கு அறிந்துகொள்ளவும், வாக்காளர் பட்டியலை பிழையின்றி புதுப்பித்தலுக்குத் தேவையான படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகளை அவர்களுக்கு வழங்கவும் இப்பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களின் பணிக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை அவர்கள் இப்பயிற்சியின் வழி அறிந்து கொள்வார்கள்.

எம்.பிரபாகரன்

Leave a Reply