நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதற்கு இந்தியாவில் போதுமான உள்நாட்டு நிலக்கரி இருப்புகள் உள்ளன. இது நாட்டின் எரிசக்தி தேவைகளில் 55% உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, 01.04.2024 நிலவரப்படி, நாட்டின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வளங்கள் முறையே 389.42 பில்லியன் டன் மற்றும் 47.29 பில்லியன் டன்கள் ஆகும்.
நாட்டில் தற்போதுள்ள நிலக்கரி இருப்பு திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்கத் திறனை மேம்படுத்த, நிலக்கரி நிறுவனங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் உற்பத்தி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. சுரங்கங்களில் தொடர்ச்சியாக சுரங்கத் தொழிலாளர்களும், இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
நாட்டின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. 2023-2024-ம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.826 மில்லியன் டன் ஆகும். இது 2022-2023 ஆம் ஆண்டில் 893.191 மில்லியன் டன்னாக இருந்தது. இது சுமார் 11.71% வளர்ச்சியாகும். நடப்பு 2024-25 ஆம் ஆண்டில், நாடு 929.15 மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரியை (பிப்ரவரி 2025 வரை) உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த 2023-24 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 881.16 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 5.45% வளர்ச்சி விகிதமாகும்.
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திவாஹர்