வெடிமருந்து, நீர்மூழ்கி வெடிகுண்டு மற்றும் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் பத்தாவது படகு, மார்ச் 26ம் தேதி, தானேயில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தில் இயக்கி வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மும்பை நீர்மூழ்கிக் கப்பல் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ராகுல் ஜகத் கலந்து கொண்டார்.
11 டார்பிடோ படகுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் தானேயில் உள்ள எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் நிறுவனமான சூர்யதிப்தா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் 2021 மார்ச-05-ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்தப் படகுகள், இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய கப்பல் பதிவேடு (ஐஆர்எஸ்) ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (என்.எஸ்.டி.எல்) மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கப்பல் கட்டும் தளம் இதுவரை பதினோரு படகுகளில் ஒன்பது படகுகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இந்தியக் கடற்படையால் அதன் செயல்பாட்டு பரிணாம வளர்ச்சிக்கு திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பத்தாவது படகு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தப் படகுகள் மத்திய அரசின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முன்முயற்சிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.
எம்.பிரபாகரன்