கான்பூர் ஐஐடியில் ஆசியாவின் மிகப்பெரிய கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு விழா டெக் க்ருத்தி 2025-ஐ ராணுவ தலைமை தளபதி அனில் சௌஹான் தொடங்கி வைத்தார். இந்திய ராணுவத்தில் முன்னேற்றம் மற்றும் நவீனமயத்தின் அவசியம் பற்றிய கருத்துகளை தமது உரையாடலின்போது தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், சைபர் போன்றவற்றில் எதிர்கால போர்களில் அதிகரித்துவரும் சவால்களுக்கு தயார்நிலையில் இருக்க வேண்டியதன் கண்ணோட்டங்களை அவர் பகிர்ந்துக்கொண்டார்.
ஒழுக்கம் மற்றும் உறுதி, துணிவு மற்றும் தியாகம் ஆகியவற்றின் பெருமைகளை எடுத்துரைத்து இளம் அறிவியலாளர்கள், மாணவர்கள், என்சிசி படைப்பிரிவினர் ஆகியோரை அவர் ஊக்கப்படுத்தினார். அவரது பேச்சு பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களை ஈர்ப்பதாக அமைந்தது.
தொடக்க விழாவில் மத்திய விமானப்படை பிரிவு தளபதி பொறுப்பு வகிக்கும் ஏர்மார்ஷல் அஷூதோஷ் தீக்ஷித், கான்பூர் ஐஐடி இயக்குநர் பேராசிரியர், மகிந்திர அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்