31.03.2024 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் வசம் உள்ள மொத்த நிலம் சுமார் 4.90 லட்சம் ஹெக்டேர் ஆகும், இதில் 8812 ஹெக்டேர் நிலம் பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. பயணிகள் வசதிகள், சரக்கு தொடர்பான வசதிகள், வணிக மேம்பாடு போன்றவற்றுக்காக குத்தகைக்கு / உரிமம் பெற்ற ரயில்வே நிலம் இதில் அடங்கும்.
தடங்கள், நிலையங்கள், முனையங்கள், பணிமனைகள், உற்பத்தி அலகுகள் போன்றவை இதில் அடங்கும். மேலும், அரசுத் துறைகள், கேந்திரிய வித்யாலயா, பொதுச் சேவை பயன்பாட்டு வழங்குநர்கள், தனியார் துறைகளுக்கு பயணிகள் வசதிகள், சரக்கு தொடர்பான வசதிகள் போன்ற ரயில்வே தொடர்பான நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள கொள்கையின்படி ரயில்வேயின் உரிமையைப் பேணும் குத்தகைக்கு / உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிலத்தை வணிக வளர்ச்சிக்கு குத்தகைக்கு விடுவதற்காக எதிர்காலத்தில் செயல்பாட்டு நோக்கத்திற்காக தேவைப்படாத உபரி காலியாக உள்ள நிலங்கள், ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். வணிக ரீதியாக உருவாக்கப்பட்ட ரயில்வே நிலத்தின் உரிமை எப்போதும் ரயில்வேயிடம் உள்ளது.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்..
திவாஹர்