ஹெலனிக் விமானப்படை நடத்தும் மதிப்புமிக்க பன்னாட்டு விமானப் பயிற்சியான இனியோகோஸ் -25 பயிற்சியில் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) பங்கேற்கிறதுமழ. இந்த பயிற்சி கிரீஸின் ஆண்ட்ராவிடா விமான தளத்தில் 31 மார்ச் 2025 முதல் 11 ஏப்ரல் 2025 வரை நடைபெறும். இந்திய விமானப்படை பிரிவில் சுகோய் -30 எம்கேஐ போர் விமானங்களும், ஐஎல் -78, சி -17 போர் விமானங்களும் அடங்கும்.
இனியாகோஸ் (INIOCHOS) என்பது ஹெலெனிக் விமானப்படையால் நடத்தப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பன்னாட்டு விமானப் பயிற்சியாகும். விமானப்படைகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உத்திசார் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது. இந்த பயிற்சி பதினைந்து நாடுகளின் விமானப்படைகளை ஒருங்கிணைக்கும்.
ஒருங்கிணைந்த வான் நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், சிக்கலான வான் போர் சூழ்நிலைகளில் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்துதல், செயல்பாட்டு சிறந்த நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை இந்த பயிற்சி வழங்கும்.
இனியாகோஸ் (INIOCHOS-25) பயிற்சி இந்தியாவின் உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, நட்பு நாடுகளுடனான கூட்டு நடவடிக்கைகளில் அதன் திறன்களை வலுப்படுத்தும்.
எம்.பிரபாகரன்