28 மார்ச் 25 அன்று மியான்மரிலும் தாய்லாந்திலும் பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தைத் தொடர்ந்து, இந்திய அரசு மியான்மருக்கு உதவி வழங்குவதற்காக ஆபரேஷன் பிரம்மா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, என்டிஆர்எஃப் ஆகியவற்றுடன் இணைந்து முயற்சிகள் நடைபெறுகின்றன.
மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணத்திற்கான (HADR) இந்திய கடற்படையின் உடனடி உதவியின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இந்திய கடற்படை கப்பல்களான சத்புரா, சாவித்ரி ஆகியவை மார்ச் 29, 25 அன்று யாங்கூனுக்குப் புறப்பட்டன. கூடுதலாக, அந்தமான் – நிக்கோபார் கட்டளையகத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை கப்பல்களான கர்முக், எல்சியூ 52 ஆகியவையும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மார்ச் 30, 25 அன்று யாங்கூனுக்கு பயணிக்கின்றன. அத்தியாவசிய ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் உட்பட சுமார் 52 டன் நிவாரணப் பொருட்கள் இந்த கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் ‘பேரிடர்களின்போது முதலில் உதவி அளிக்கும் நாடு’ என்ற இந்தியாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இந்திய கடற்படை உறுதிபூண்டு இந்தப் பணிகளைச் செய்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா