கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?-ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?- அண்ணாமலை கேள்வி.

1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா திரு முக ஸ்டாலின் அவர்களே?

இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.

2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?

திரு முக ஸ்டாலின் அவர்களே. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

One Response

  1. MANIMARAN March 31, 2025 6:15 am

Leave a Reply to MANIMARAN Cancel reply