ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவின் நிலக்கரித் துறை 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஒரு பில்லியன் டன் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. இந்த அபாரமான சாதனை, உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நிலக்கரியை அனுப்புவதை ஒழுங்குபடுத்துவதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமான நிலக்கரி அமைச்சகத்தின் இடைவிடாத முயற்சிகளைச் சுட்டிக் காட்டுகிறது.
2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி இப்போது ஒரு பில்லியன் டன் அளவைத் தாண்டி, 1047.57 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது 2023-24 நிதியாண்டில் 997.83 மில்லியன் டன்னாக இருந்தது. இதனோடு ஒப்பிட 4.99% கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல், நிலக்கரி அனுப்புதலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதலும் ஒரு பில்லியன் டன் மைல்கல்லை தாண்டி, 1024.99 மில்லியன் டன்னை எட்டியுள்ளது, இது நிதியாண்டு 2023-24 இன் 973.01 மில்லியன் டன் அளவோடு ஒப்பிடும்போது, 5.34% குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
இந்த மைல்கல் சாதனை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது, அதே நேரத்தில் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான திறமையான விநியோகத்தையும் உறுதி செய்கிறது. நிலக்கரி அமைச்சகம் தற்சார்பை வளர்ப்பதற்கும், இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவை மேம்படுத்துவதற்காக நிலையான சுரங்க நடைமுறைகளை இயக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது.
திவாஹர்