மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி வாரியம் 01.05.2025 முதல் குறிப்பிட்ட விமான நிலையங்களில் விமானப் பயணிகள் தனிப்பட்ட முறையில் கொண்டு செல்லும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் / மாதிரிகள் / முன்மாதிரிகள் தொடர்பான நுழைவு ரசீது / கப்பல் ரசீது ஆகியவற்றை மின்னணு முறையில் செயலாக்கும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட வாகனங்கள் மூலம் ஏற்றுமதி / இறக்குமதி வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023 மற்றும் நடைமுறைகளின் கையேடு (HBP), 2023 ஆகியவற்றின் விதிகளுக்கு இந்த நடைமுறை உட்பட்டது.
ஒன்பது விமான நிலையங்களில் (டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி, கோயம்புத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர்) ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்காகவும், ஏழு விமான நிலையங்களில் (டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர்) ரத்தினங்கள் மற்றும் நகைகள் இறக்குமதி செய்யவும் தனிப்பட்ட வாகன வசதி கிடைக்கும். இயந்திரங்களின் மாதிரிகள் / முன்மாதிரிகளைப் பொறுத்தவரை, இந்த வசதி முதற்கட்டமாக பெங்களூரு, சென்னை, தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கிடைக்கிறது.
இந்த இணக்கமான நடைமுறை மற்றும் மின்னணு செயலாக்கம் இத்தகைய பரிவர்த்தனை முறைக்கு, குறிப்பாக ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றில் எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கும்.
திவாஹர்