இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியின் (ஹெச்.ஏ.டி.ஆர்.)4- வது பதிப்பின் தொடக்க விழா இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலாஷ்வா (எல்41) கப்பலில் நேற்று (2025 ஏப்ரல் 01) நடைபெற்றது. அமெரிக்க-இந்தியா உத்திசார்ந்த கடல்சார் நலன்கள் மற்றும் நாடுகளின் பாதுகாப்பு கூட்டாண்மை ஆகியவற்றின் வலுவான ஒருங்கிணைப்பை இந்தப் பயிற்சி பிரதிபலிக்கிறது.
இந்தப் பயிற்சியின் துறைமுக கட்டம் விசாகப்பட்டினத்தில் 2025 ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 07 வரை நடத்தப்படுகிறது. மேலும் கடலில் பல்வேறு பயிற்சி நிகழ்வுகளை நிறைவேற்றுவதற்கான திட்டமிடல் செயல்முறையையும், டைகர் டிரையம்ப் என்று பெயரிடப்பட்ட பயிற்சியின் முந்தைய நிகழ்வுகளில் நிறுவப்பட்ட நடைமுறைகளை மேலும் செம்மைப்படுத்துவதையும் உள்ளடக்கியதாகும் .இதற்கு மேலதிகமாக, துறைமுக கட்டத்துக்கான பயிற்சி ஏப்ரல் 8-12 இல் நடைபெறும். இதில் சிறப்பு நடவடிக்கைகள், அவசர மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் மற்றும் வான், கடல்சார் இணையதளம் மற்றும் விண்வெளி களங்களில் செயல்பாடுகள் போன்ற பல்வேறு தொழில்முறை பிரிவுகளில் பயிற்சி மற்றும் பரிமாற்ற நிகழ்வுகள் அடங்கும். இந்த பரிமாற்றங்கள் நமது படைகள் சிறந்த நடைமுறைகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும், வலுவான பிணைப்புகளை உருவாக்கவும் அனுமதிக்கும். நட்புறவை வளர்ப்பதற்கும் தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பதற்கும் விளையாட்டு ஈடுபாடுகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கான வருகைகளும் ஒருங்கிணைக்கப்படும்.
08-12 ஏப்ரல் 25 வரை நடைபெறும் கடல் கட்ட பயிற்சியின் போது, இருதரப்பு படைகள் ஒரு கூட்டு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் கடல்சார், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்க ஒன்றிணைந்து செயல்படும்.
திவாஹர்