2024-25-ம் நிதியாண்டில் அரசு மின்னணு சந்தை மூலம் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

மின்னணு கொள்முதல் தளமான அரசு மின்னணு சந்தை(ஜெம் )மூலம், 2024-25-ம் நிதியாண்டில்  அரசு நிறுவனங்களால் 10 லட்சத்துக்கும்  அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சந்தை நடடிவக்கைகளில் வெளிப்படைத்தன்மை, எளிமையான நடைமுறை, செயல்திறன் ஆகியவற்றின் மூலம் பொதுக் கொள்முதல் நடைமுறைகளை மாற்றியமைப்பதில் அரசு மின்னணு சந்தையின் உறுதியான செயல்பாடுகளை இது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் 3-வது  நபர் அல்லது முகமை மூலம் மேற்கொள்வதற்கு அரசு மின்னணு சந்தை இணையதளம் வகை செய்கிறது. இது கொள்முதல் செய்பவர்களுக்கு தடையற்ற வசதியை வழங்குகிறது. இந்தத் தளத்தின் 33,000 க்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்கள் குறைந்தபட்ச ஊதியம்  அல்லது நிலையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றனர். பாதுகாப்புப் பணியாளர்கள், தோட்டக்கலை ஊழியர்கள், பன்முகத் தன்மையுடன் கூடிய ஊழியர்கள்(எம்.டி.எஸ்.), தரவு பதிவு செய்யும் நபர்கள் போன்ற பல்வேறு திறன் கொண்ட நபர்களை இந்த இணையதளம் வாயிலாக  பணியமர்த்த முடியும்.

அரசு மின்னணு தொழில்நுட்பம் டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்தியுள்ளதுடன், நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் நுகர்வோருக்குத் தேவையான அனைத்து சாத்தியமான சேவைகளையும் கொள்முதல் செய்வதற்கான ஒரே இடமாக உருவெடுத்துள்ளதாக அரசு மின்னணு சந்தையின் தலைமை செயல் அதிகாரி திரு அஜய் படூ தெரிவித்துள்ளார். இந்த இணையதளம் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதுடன் பிற சேவைகளையும் மேற்கொள்ள உதவுகிறது என்று கூறினார்.

Leave a Reply