இந்திய கடற்படையின் முதல் முயற்சியான இந்தியப் பெருங்கடல் கப்பல் சாகர் (ஐஓஎஸ் சாகர்) கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தில் அதன் துறைமுகம் மற்றும் கடல் நிலையிலான பயிற்சியை நிறைவு செய்துள்ளது. கப்பல் தனது குழுவினருடன் கார்வாருக்கு புறப்பட்டது.
09 நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 சர்வதேசப் பயிற்சியாளர்கள் அடிப்படை கடல்சார் நடவடிக்கைகள் முதல் அதிநவீன பயிற்சி வரை சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சியைப் பெற்றனர். ஒரே கடல் ஒரே இயக்கம் என்ற குறிக்கோளை உண்மையிலேயே மெய்ப்பிக்கும் வகையில், சர்வதேச குழுவினருக்கு தகவல் தொடர்பு திறன்கள், தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு பயிற்சிகள், கப்பலில் சோதனை மற்றும் கைப்பற்றுதல் நடைமுறைகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் ஒன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடல்சார் சவால்களை எதிர்கொள்ள மாலுமிகளை ஆயத்தப்படுத்த செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான அமைப்பை இந்தப் பயிற்சியின் கலந்துரையாடல்கள் ஏற்படுத்தின. கடந்த தசாப்தங்களில், இந்தியக் கடற்படையின் கடல்சார் பயிற்சி நிறுவனங்கள் 50 க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த 20,000 அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு பயிற்சி அளித்துள்ளன.
எம்.பிரபாகரன்