நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது தினேஷ்சந்திர ஆர் அகர்வால் இன்ஃப்ராகான் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி 121 கி.மீ நீளமுள்ள குவஹாத்தி சுற்றுச் சாலை மொத்தம் ரூ.5,729 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ளது. சாலை உருவாக்குதல்-இயக்குதல்-சுங்கவரி வசூலித்தல் என்ற முறையில் எந்த மானியமும் இல்லாமல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தக் காலம் 30 ஆண்டுகள் ஆகும். இதில் நான்கு ஆண்டு கட்டுமானக் காலமும் அடங்கும்.
இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், அசாம் மாநில அரசு நிலச் செலவில் 50% ஏற்கும்.
குவஹாத்தி சுற்றுச் சாலைத் திட்டம் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான நுழைவாயிலான தேசிய நெடுஞ்சாலை எண் 27-ன் கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் செல்லும் நீண்ட தூர போக்குவரத்திற்கு குவஹாத்தி சுற்றுச்சாலை தடையற்ற இணைப்பை வழங்கும்.
திவாஹர்