தாய்லாந்து மன்னர் மற்றும் அரசியுடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.

தாய்லாந்து அரசர் மஹா வஜிரலோங்கோர்ன் ஃபிரான் வஜிராக்லாவ் சாவோயுஹுவா மற்றும் மேதகு அரசி சுதிடா பஜ்ரசுதாபிமலலக்ஷனா ஆகியோரை பாங்காக்கில் உள்ள துசித் அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள கலாச்சார பாரம்பரியம் குறித்த கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு பயணம் செய்த புத்தரின் நினைவுச் சின்னங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையேயான மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த முயற்சி ஏற்படுத்திய நேர்மறையான தாக்கம் குறித்தும் அவர்கள் பேசினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

Leave a Reply