இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல் ஐஎன்எஸ் சுனைனா கார்வாரில் இருந்து இந்தியப் பெருங்கடல் கப்பல் – சாகர் முன்முயற்சியின் கீழ் பயணிக்க உள்ளது. ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 கடற்படை வீரர்களைக் கொண்டு பணியில் ஈடுபடும் இந்தக் கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (05.04.2025) கார்வாரிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதில் இந்த இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
ஐஓஎஸ் சாகர் என்பது தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடற்படைகள், கடல்சார் முகமைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாகும் .
இந்த விழா இந்திய கடற்படை யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
திவாஹர்