பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கை மித்ர விபூஷனா விருது வழங்கி கௌரவிப்பு.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர் திசநாயக்க ‘இலங்கை மித்ர விபூஷனா’ என்ற விருதை வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்த திரு மோடி, இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துவதாக கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

“அதிபர் திசநாயக்க அவர்களால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷனா’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விஷயமாகும். இந்த உயரிய கௌரவம் எனக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயரிய மரியாதையாகும். அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழமாக வேரூன்றிக் காணப்படும் நட்புறவின் அடையாளத்தை இது குறிக்கிறது. இந்தக் கௌரவத்துக்காக இலங்கை அதிபர் , அரசு மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்’’.

Leave a Reply