மீனவர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனமிரங்காமல், கண் மூடி, காதுகளை அடைத்து வாய் மூடி மவுனித்திருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

மீனவர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனமிரங்காமல், கண் மூடி, காதுகளை அடைத்து வாய் மூடி மவுனித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் – வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.

அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி – காதுகளை அடைத்துக் கொண்டு – வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.

எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான – மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply