அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நீங்கள் ஒரு குடிமகனாக ஓய்வு பெற்றவர் என்று அர்த்தமல்ல: டாக்டர் ஜிதேந்திர சிங்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் நீங்கள் ஒரு குடிமகனாக ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல” என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் தருவாயில் உள்ள நூற்றுக்கணக்கான அதிகாரிகளிடையே உரையாற்றினார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை ஒரு முடிவாகப் பார்க்கக் கூடாது என்றும், தேச நிர்மாணத்தில் பங்களிப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் என்ற புதிய பொறுப்புக்கு மாறுவதாகக் கருத வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 56-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கு மற்றும் 9-வது வங்கியாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை இந்திய சமூகம் பார்க்கின்ற நோக்கில் ஒரு முன்னுதாரணமான மாற்றம் தேவை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

60 வயதில் பல அதிகாரிகள் தங்களது ஆற்றல் மற்றும் நிபுணத்துவத்தின் உச்சத்தில் உள்ளனர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எனவே தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்த விரும்புகிறோம். பிரதமர் சொல்வது போல், ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2047-ம் ஆண்டுவாக்கில் இந்தியா வளர்ந்த நாடாக மாற தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கருத்துக்கள் ஞானம், அர்ப்பணிப்பு மற்றும் பொது சேவை ஆகியவை ஓய்வு பெறுவதில்லை – அவை உருவாகின்றன என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகின்றன.

Leave a Reply