மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தில்லி சுகாதாரத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், தில்லி தேசிய தலைநகர் பகுதியானது சுகாதாரத் துறையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்கினார். தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜே.பி.நட்டா, ஆயுஷ்மான் பாரத் பிரதமர்-ஜேஏஒய் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும் என்றும், இதன் கீழ் தற்போது 62 கோடி மக்கள் பயனடைந்து வருவதாகவும் கூறினார். இத்திட்டத்தின் மூலம் தில்லியில் 36 லட்சம் பேர் பயனடைவார்கள் என்பது பெருமைக்குரியது என்று அவர் கூறினார்.
தில்லியில் ஏபி பிஎம்-ஜேஏஒய் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஆயுஷ்மான் வய வந்தனா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்றும் திரு நட்டா தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் 8.19 கோடி மக்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்றுள்ளனர், இதற்காக அரசு கூட்டுமொத்தமாக ரூ .1.26 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது” என்று மத்திய சுகாதார அமைச்சர் எடுத்துரைத்தார். இவர்களில் 19 லட்சம் பேர் அடித்தட்டு மக்கள் என்றும், ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் இல்லாமல் இவர்களால் இந்த சிகிச்சைகளைப் பெற்றிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விளைவாக, கையிலிருந்து செலவிடும் தொகை 62 சதவீதத்திலிருந்து இன்று 38 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
திவாஹர்