எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து நீண்ட தூர கிளைடு குண்டு சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 2025 ஏப்ரல் 08-ம் தொடங்கி 10-ம் தேதிக்கு இடையில் எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து, கௌரவ்’ எனப்படும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வெடிகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சோதனைகளின் போது, தீவில் தரை இலக்குகளை நோக்கி 100 கி.மீ தூரம் வரை துல்லியமாகப் பயணிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.

எல்.ஆர்.ஜி.பி ‘கௌரவ்’ என்பது 1,000 கிலோ கிளைட் குண்டு ஆகும். இது சந்திபூரின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இமாராத் ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஆகியவற்றால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.  டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த சோதனைகளை ஆய்வு செய்தனர்.

வெற்றிகரமான இந்த சோதனைகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய விமானப்படை மற்றும் தொழில்துறையை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். எல்.ஆர்.ஜி.பி.யின் வளர்ச்சி ஆயுதப்படைகளின் திறன்களை பெரிய அளவில் மேம்படுத்தும் என்றும அவர் கூறினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், வெற்றிகரமாக சோதனைகளை நடத்திய ஒட்டுமொத்த டிஆர்டிஓ குழுவினரையும் வாழ்த்தினார்.

Leave a Reply