விளிம்பு நிலை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்வையே அர்பணித்தவரும், கல்வியின் மூலமாக சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என வலியுறுத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைக்கும் சான்றுகளாக, அவருடைய வாழ்வியலோடு தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களை “பஞ்ச தீர்த்தங்கள்” என்று அறிவித்து அவற்றை வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களாக உருவாக்கி அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த
“மோவ்” என்ற இடத்தை “ஜனம் பூமி” என்றும்…
லண்டனில் உயர்கல்வி பயிலும் போது அவர் தங்கியிருந்த இடத்தை “சிக்ஷ பூமி” என்றும்…
நாக்பூரில் அவர் பெளத்த தீட்சை பெற்ற இடத்தை “தீக்ஷா பூமி” என்றும்…
டெல்லியில் வாழ்ந்து அவர் உயிர்நீத்த இடத்தை “மஹாபரிநிர்வான் பூமி” என்றும்…
மும்பையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற இடத்தை “சைத்ய பூமி” என்றும்…
அறிவிக்கப்பட்டு இவை அனைத்தும் “பஞ்ச தீர்த்த” நினைவிடங்களாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை வலியுறுத்தியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்…
சமூக நீதி என்பது வெறும் வார்த்தை அல்ல! உண்மையான சமூக நீதி என்பது விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் என்பதை அரசின் உயர் பொறுப்புகளில் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த எளிய மனிதர்களை நியமித்து நடைமுறையில் சமூகநீதியை நிரூபித்து வருகிறது பிரதமர் திரு.நரேந்திர மோதி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.
இவ்வாறு தமது அறிக்கையில் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
-கே. பி. சுகுமார். B.E., ullatchithagaval@gmail.com