பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு; துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்; பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பல மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே; மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி; மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ்; டெல்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா; நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா; மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே; மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி; மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ்; டெல்லி முதல்வர் திரு. ரேகா குப்தா; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் உள்ள பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பொதுச் செயலாளர்கள் திரு. உத்பல் குமார் சிங் மற்றும் திரு. பிசி மோடி ஆகியோர் முறையே சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் உள்ள பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, டாக்டர் அம்பேத்கருக்கு மிகுந்த அஞ்சலி செலுத்திய ஸ்ரீ பிர்லா, சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, நாட்டின் முதல் சட்ட அமைச்சர் பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலிகள். பாபாசாகேப் தனது வாழ்நாள் முழுவதும் சமத்துவம், சுதந்திரம், நீதி மற்றும் சகோதரத்துவத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார். ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்த அவர், சமூகத்தில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர கல்வியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தினார். அரசியலமைப்புச் சபையில் வரைவுக் குழுவின் தலைவராக, உலகின் சிறந்த சட்டமன்ற ஆவணமான ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை’ வரைந்தார். அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், பாபாசாகேப்பின் தத்துவம் இன்னும் பொருத்தமானதாகிறது. அனைத்து வகையான அநீதி, சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்க அவரது கருத்துக்கள் நம்மைத் தூண்டுகின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்கும் தேசத்தின் அதிகாரமளிப்பிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை, பல நூற்றாண்டுகளாக மில்லியன் கணக்கான நாட்டு மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்.”
திவாஹர்