புதுமையான நடைமுறைகளை ஊக்குவிக்கவும், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிபுணர்களை அங்கீகரிக்கவும், ‘தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பு விருதுகள் 2023’ (NHEA 2023) இன் ஆறாவது பதிப்பு ஏப்ரல் 15, 2025 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும். மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு அஜய் தாம்தா; மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா; மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை இணையமைச்சர் திரு வி உமாசங்கர்; மாண்புமிகு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலர் திரு வி உமாசங்கர்; மாண்புமிகு சாலைப் போக்குவரத்துத் துறை, NHAI மற்றும் பிற பங்குதாரர்களின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவுகூரும் ஒரு தளமாக NHEA 2023 செயல்படும், மேலும் நாடு முழுவதும் சிறப்பாகச் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை சொத்துக்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் அவர்களின் பங்களிப்பிற்காக நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களை அங்கீகரிக்கும்.
நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வில், கள நிபுணர்களுடன் பல்வேறு ‘குழு விவாதங்கள்’ இடம்பெறும், மேலும் நெடுஞ்சாலை கட்டுமானத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் இந்திய கட்டுமான நிறுவனங்களின் உலகளாவிய போட்டித்தன்மை போன்ற தலைப்புகளில் ஆராயப்படும்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களிடையேயும் ஆரோக்கியமான போட்டி உணர்வை உருவாக்குவதையும், முக்கிய பங்குதாரர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் ‘தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகள்’ நிறுவனமயமாக்கப்பட்டன.
திவாஹர்