மத்திய அரசைக் குறை கூறி, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஏற்புடையதல்ல!- ஜி.கே.வாசன் அறிக்கை.

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டத்திங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதனால் தமிழ்நாடு முன்னேறி, தமிழக மக்கள் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது மத்திய அரசைக் குறை கூறி, மாநில வளர்ச்சியில் மத்திய ஆட்சியின் பங்கை மறைத்து, எதிரிக்கட்சியாக நினைத்து சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்து தீர்மானம் நிறைவேற்றியது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

                 குறிப்பாக மாநில சுயாட்சியை உறுதி செய்ய, மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய குழு அமைக்கப்படுவதும், குழுவில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்பதும் தமிழக அரசின் தேவையற்ற, முறையற்ற செயல்பாடுகளில் ஒன்றாகும்.

                மத்திய அரசால் தமிழக மக்கள் பெறும் பயன்களை தடுக்கும் விதமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் விதமாக மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் அமைகிறது.

இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அனைத்து மாநில உரிமைகளையும் முறையாகப் பாதுகாக்கிறது.

 எனவே தமிழக அரசு – இப்போது கொண்டுவந்துள்ள மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்…

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply