ஐஎன்எஸ்வி தாரிணி கப்பல் கேப்டவுனில் இருந்து பெண்களின் கடற்பயணம் II -க்கான இறுதிக் கட்டப் பயணத்தைத் தொடங்கியது.

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பாய்மரக்கப்பல் (ஐஎன்எஸ்வி) தாரிணி தனது இறுதிக்கட்ட கோவா பயணத்திற்காக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள ராயல் கேப் யாட் கிளப்பிலிருந்து  இன்று (2025 ஏப்ரல் 15)  கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது. கேப் டவுனில் உள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் கடல் பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கடற்படையில் உள்ள இந்தியப் பெண்களின் வலிமையை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களை எடுத்துக்காட்டுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டும் இந்தப் பயண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பெண்களின் கடற்பயணம்-II-ன் ஒரு பகுதியாக, லெப்டினன்ட் கமாண்டர் தில்னா கே, லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஏ ஆகியோரால் இயக்கப்படும் ஐ.என்.எஸ்.வி தாரிணி, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகள் மற்றும் மக்கள் சந்திப்பு மையமாகச் செயல்பட்டது.

இந்தப் பயணம் கலாச்சார பரிமாற்றத்திற்கான வாய்ப்பை வழங்கியதுடன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே வளர்ந்து வரும் கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துரைத்தது.

பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்நாட்டு படகு கட்டுமானத்தில் இந்தியாவின் திறன் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் ஐ.என்.எஸ்.வி தாரிணி குழுவினர் ஈடுபட்டனர்.

ஐ.என்.எஸ்.வி தாரிணி 2025 மே மாத இறுதியில் கோவாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் மற்றொரு பெருமைமிக்க அத்தியாயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதைக் குறிக்கிறது.

Leave a Reply