பிரதமர் திரு நரேந்திர மோடியும் டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே பிரடெரிக்சனும் இன்று (15.04.2025) தொலைபேசிவழி உரையாடினர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், உலகளாவிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
2020-ம் ஆண்டில் பசுமை உத்தி ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளதை நினைவு கூர்ந்த தலைவர்கள், பல்வேறு துறைகளில் பசுமை உத்தி திட்டங்களில் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளதைக் குறிப்பிட்டனர். இது இந்தியாவில் டென்மார்க் முதலீடுகளுக்கும் பசுமை மாற்றத்திற்கு பங்களிக்கவும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது என அவர்கள் கூறினர். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
நார்வேயில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் இதில் டென்மார்க் பிரதமர் தி்ருமதி மெட்டே ஃபிரடெரிக்சனுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா