ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1999 கார்கில் போர் அமைந்தது. இப்போரில் துணிச்சலுடன் போரிட்டு தைரியம், தியாகத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தை இந்திய விமானப்படை கொண்டுள்ளது. கார்கில் போரில் இந்திய விமானப்படையின் நடவடிக்கைகள் எதிரிகளை குறிவைப்பதில் தனித்துவமான செயல்பாட்டு சிரமங்களைக் கொண்டிருந்தது. 16,000 அடிக்கு மேல் செங்குத்தான சாய்வு உயரங்களைக் கொண்ட சிகரத்தில் சவால்களை சமாளிக்கும் இந்திய விமானப்படையின் திறனுக்கு இது ஒரு சான்றாகும். உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் நடந்த இந்த போரில் வெற்றி பெற விமானப்படை தனது சக்தியை பயன்படுத்தியது.
கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், இந்திய விமானப்படை, கார்கில் வெற்றி தின வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை (கார்கில் விஜய் திவாஸ் ரஜத் ஜெயந்தி) 2024 ஜூலை 12 முதல் 2024 ஜூலை 26 வரை சர்சாவா விமானப்படை நிலையத்தில் கொண்டாடுகிறது.
2024 ஜூலை 13 அன்று, விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்குள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களை கௌரவித்து, அவர்களுடன் விமானப் படை தளபதி உரையாடினார்.
விமானப்படை இசைக்குழுவின் நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியைப் பள்ளிக் குழந்தைகள், சஹரன்பூர் பகுதியின் உள்ளூர்வாசிகள், முன்னாள் படை வீரர்கள் உட்பட 5000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
திவாஹர்