என்சிஆர் உயிரி தொழில்நுட்ப தொகுப்பில் உயர்தர தரவு, நிபுணத்துவத்திற்கான ஒத்துழைப்புக்கு பிரிக்-திஷ்டி சார்பாக தொழில்துறை சந்திப்பு நடைபெற்றது.

இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையின், பயோடெக்னாலஜி ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன் கவுன்சில் (பிரிக்)-ன் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (திஷ்டி), சின்சன் 2024 ( என்.சி.ஆர் உயிரி தொழில்நுட்ப தொகுப்பில் உயர்தர தரவு மற்றும் நிபுணத்துவத்திற்கான ஒத்துழைப்புக் கூறுகளின் மூலம் உருவாக்கப்பட்ட அறிவியல் ஒத்திசைவு) என்ற வெற்றிகரமான தொழில்துறை சந்திப்பை ஜூலை 14, 2024 அன்று அதன் வளாகத்தில் நடத்தியது. இந்த நிகழ்வு புத்தொழில்  நிறுவனங்கள், நிறுவப்பட்ட நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்களின் பிரதிநிதிகள் உட்பட உயிரி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.

நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் வினோத் கே. பால் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். உயிரி கண்டுபிடிப்புகளை இயக்குவதற்கும், இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியின் தலைமையாக நிறுவுவதற்கும், தற்சார்பு இந்தியா தொலைநோக்குடன் இணைந்து, 100 நாள் பயணங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) முன்னாள் தலைமை இயக்குநர் பேராசிரியர் நிர்மல் கே.கங்குலி கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.  மருத்துவ உயிரி தொழில்நுட்பத் துறையில் கல்வி மற்றும் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பேராசிரியர் கங்குலி எடுத்துரைத்தார். உயிரி கண்டுபிடிப்பு மற்றும் உயிரி உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் திஷ்டியின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

திவாஹர்

Leave a Reply