கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பிஇஎம்எல் ஆகிய நிறுவனங்களைப் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இன்று (15.07.2024) பார்வையிட்டார். பாதுகாப்புத்துறையின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை நனவாக்குவதற்கு இந்நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
உலகளாவிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இந்த நிறுவனங்கள் தனியார் துறையுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துமாறு அமைச்சர் வலியுறுத்தினார். இந்த இயக்கத்திற்கு மத்திய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
பிஇஎம்எல் நிறுவனத்திற்கு பயணம் செய்த திரு சஞ்சய் சேத், பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை சாதனைகளில் மற்றொரு மையல் கல்லாக குறிக்கப்படுகின்ற ஓட்டுநர் இல்லாத எம்ஆர்எஸ்-1 என்ற புதிய மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
எம்.பிரபாகரன்