மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சியை நடத்தியது.

கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சகம்,  ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர்,  ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கும் 21 வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பான மண்டலப் பயிற்சியை நடத்தியது. கணக்கெடுப்பின்போது, கால்நடை இனங்கள் குறித்து இந்தப் பயிற்சியில் இடம்பெற்றது. 

2024 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள 21-வது கால்நடைக் கணக்கெடுப்பை நடத்துவதற்காக, இணைய பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒடிசாவின் பூரியில் இன்று இந்தப் பயிலரங்கு நடைபெற்றது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பயிலரங்கில் உரையாற்றுகையில், அடிமட்ட அளவில் விரிவான பயிற்சி, திறன் மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இந்தியாவில் ஒடிசாவிலும் மேற்கு வங்கத்திலும் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் உள்ளன என்பதை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பொருளாதாரத்திலும் உணவுப் பாதுகாப்பிலும் கால்நடைத் துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். இந்த கால்நடைக் கணக்கெடுப்பை உன்னிப்பாக திட்டமிடி செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமைச்சர், சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால முன்முயற்சிகளை வடிவமைப்பதிலும், இத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறைச் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா காணொலி மூலம் பங்கேற்றார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply