வேலூர் கோட்டையை பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலூர் கோட்டை மற்றும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்துப் பராமரிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நிதி ஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டார்.

வ.எண் நினைவுச் சின்னத்தின் பெயர் 2019-20 2020-21 2021-22 2022-23 2023-24
      (தொகை ரூபாயில்)
1. வேலூர் கோட்டை 52,78,140 7,35,824 72,87,064 1,30,47,228 1,31,28,321
2. வேலூர் கோட்டைக்கு உள்ளே இருக்கும் பழைய மசூதி 1,24,386   85,612 2,68,129 2,02,043 1,41,760
3. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் 27,96,049   1,90,929 26,76,655 6,57,130 35,71,991

நினைவுச்சின்ன வளாகங்களில் கூட்டங்கள் நடத்த மாநில அரசுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தொல்பொருள் ஆய்வுத் துறை எந்தவித கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்று அமைச்சர் கூறினார்.

1959-ஆம் ஆண்டின், பழமையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல் பொருள் ஆய்விடங்கள் குறித்த விதிமுறைகளின் கீழ், கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதாக திரு ஷெகாவத் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply