தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீடிர் என ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் 26.03.2015 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டது. அது போன்று பல தொழிற்சாலைகளை கொண்டது ஆகும். இயற்கையால் ஏற்படும் பல இடர்பாடுகளை போல் பெரிய சாலை விபத்துக்கள், தீ விபத்துக்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் கடல்வழி தீவிரவாத தாக்குதல்கள் போன்ற எந்தவிதமான பாதிப்புகள் பொது மக்களுக்கு ஏற்பட்டாலும் அதை உடனடியாக சமாளிக்கின்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும்.
அதற்காக மாவட்ட அலுவலர்கள் அனைவரும் இப்பொழுதே அதற்கான முன்னேற்பாடுகளை தயார் செய்வதிலும், பிற துறையோடு இணைந்து செயல்படுவதற்கும் தயாரான ஏற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், கோவில்பட்டி கோட்டாட்சியர் டாக்டர். கண்ணபிரான், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.