போதுமான அளவுக்கு நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகம் திட்டம்.

தேசத்துடன் ஒட்டுமொத்தமாக இணைந்து பணியாற்றுதல் மற்றும் தடைகளை உடைத்தல்” என்ற வழிகாட்டுதல் கொள்கைகளுக்கு ஏற்ப, நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், மின்சார அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து, மின்சாரம் மற்றும் உரத் துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட விலையில் போதுமான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யத் தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத எஃகு, சிமெண்ட், காகிதம் மற்றும் கடற்பாசி, இரும்பு உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கும் இந்த முயற்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டில், அமைச்சகம் 1,080 மில்லியன் டன் என்ற நிலக்கரி உற்பத்தி இலக்கை நிர்ணயித்துள்ளது. 19.07.2024 நிலவரப்படி, நிலக்கரி உற்பத்தி 294.20 மில்லியன் டன்னை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10.70% வலுவான வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது. இந்தச் சாதகமான போக்கு, பொருளாதார வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தும் அதேவேளையில், பல்வேறு துறைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நிலக்கரி அனுப்புதலைப் பொறுத்தவரை, 19.07.24 நிலவரப்படி, அமைச்சகம் 311.48 மில்லியன் டன் நிலக்கரியை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.49% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த அதிகரிப்பு முக்கிய தொழில்களின் செயல்பாட்டு தேவைகளை ஆதரிப்பதுடன் மட்டுமல்லாமல், ஆற்றல் சந்தையின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கும் பங்களிக்கிறது. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் நிலக்கரி ஒரு மலிவான மற்றும் அணுகக்கூடிய வளமாக இருப்பதை உறுதி செய்வதில் நிலக்கரி அமைச்சகம் அர்ப்பணிப்புடன் உள்ளது, இதன் மூலம் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

திவாஹர்

Leave a Reply