மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரும், எரிசக்தித் துறை அமைச்சருமான திரு. மனோகர் லாலை, அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அம்மாநில முதலமைச்சருடன் மத்திய அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நவீன மீட்டர் பொருத்துதல் மற்றும் இழப்பு குறைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திரு. மனோகர் லால், மாநிலத்தின் முயற்சிகளை பாராட்டினார்.
கவுகாத்தி நகருக்கான ஸ்மார்ட் விநியோகத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு அசாம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து மாநிலத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.
அசாமில் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி அமைக்க தேவையான மானியங்களை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 43 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 100% செறிவூட்டலுக்கான அம்ருத் திட்டங்களின் கீழ் நிதி விடுவிப்பது மற்றும் 3 அம்ருத் நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்பான பிரச்சனைகளையும் அவர் முன்வைத்தார்.
எம்.பிரபாகரன்