பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

பொலிவுறு நகரங்கள்  திட்டத்தின் கீழ் யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் சுமார் 75 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்ட  குடிநீர் விநியோகத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாகியுமான திரு. குலாப் சந்த் கட்டாரியாமாநிலங்களவை உறுப்பினர் திரு. சத்னம் சிங் சந்துமத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வு பணியகத்தின் இயக்குநர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்களில் அடங்குவர்.

தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷாஇந்தத் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்றும்855 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பில் இப்போது மொத்தம் 22 கி.மீ நீளமுள்ள புதிய குழாய் மூலம் 24 மணி நேரமும் தண்ணீர் பெற முடியும் என்றும் கூறினார்.இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதன் மூலம் 24 மணி நேரமும் நீர் கிடைப்பதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம்கசிவு செலவு இனி நுகர்வோரால் ஏற்கப்படாதுமேலும் நீர் கசிவு வீடுகள் உடனடியாக அடையாளம் காணப்படும் என்றும் அவர் கூறினார்.

தண்ணீர் என்பது உயிர் என்றும்தண்ணீர் மாசுபட்டாலோ அல்லது தேவையான அளவில் கிடைக்கவில்லை என்றாலோமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இன்று முதல் 24 மணி நேரமும்வருடத்தில் 365 நாட்களும் அதிநவீன வடிகட்டும் ஆலை மூலம் அப்பகுதி மக்களுக்கு வடிகட்டப்பட்ட நீர் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

குடிநீர்கழிவுநீர் அகற்றல் போன்ற வசதிகள் சண்டிகரில் ஆரம்பத்திலிருந்தே எப்போதும் கிடைத்து வந்ததாக திரு அமித் ஷா கூறினார்.ஆனால் மக்கள் தொகை அதிகரிப்புபழைய குழாய்கள்நீரின் தரம் காலப்போக்கில் குறைந்துவிட்டது.வடிகட்டும் ஆலைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும்தண்ணீர் கிடைப்பதையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.இந்த அம்சங்களை மனதில் கொண்டுமணிமஜ்ரா பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.இப்போது இப்பகுதியில் உள்ள பெண்கள் தண்ணீர் நிரப்ப எழுந்திருக்க தங்கள் மொபைல்களில் அலாரம் அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார்.இனிமேல் அவர்களின் குழாயில் தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்று அவர் கூறினார்.இப்போது டேங்கர்கள் இருக்காது என்றும்முதல் தளம் அல்லது நான்காவது தளமாக இருந்தாலும்மணிமஜ்ரா பகுதியில் உள்ள 1 லட்சம் மக்களுக்கும் இன்று முதல் சீராக தண்ணீர் கிடைக்கும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

2014-ம் ஆண்டு திரு. நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்துபொலிவுறு நகரங்கள் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நகரங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்து வருவதாக திரு அமித் ஷா கூறினார்.முதலில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களில் சண்டிகர் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

 பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான நீர் மற்றும் குழாய் நீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்150 மில்லியன் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதுஇது நாட்டின் 74 சதவீத குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க உதவியுள்ளது என்று அவர் கூறினார்.ஜல் ஜீவன் மிஷன்‘ திட்டம் தொடங்கப்பட்ட பிறகுநாட்டில் வயிற்றுப்போக்கு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 3 லட்சம் குறைந்துள்ளது என்று திரு ஷா கூறினார்.வயிற்றுப்போக்கால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் நான்கு லட்சம்.வீடு தோறும் தண்ணீர் ‘ திட்டத்தின் கீழ்2023-ல் 3 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.பிரதமராக திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்புநாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குழாய் நீர் கிடைக்கும் என்று திரு ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply