தமிழ்நாட்டில் இளம் கலைஞர்களை ஊக்குவிக்க கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.45.9 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய நடன வடிவங்கள், உள்நாட்டு கலைப்படைப்புகள் மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு கலாச்சாரத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளம் கலைஞர்கள் அவர்களின் மேம்பட்ட பயிற்சியைப் பெறுவதற்காக ‘பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை’ என்ற பெயரில் நிதி மானியத் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மாதம் 5,000/- வீதம், அதிகபட்சம் 400 கலைஞர்களுக்கு நான்கு சமமான ஆறு மாத தவணைகளில், 02 வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஏதேனும் ஒரு குரு அல்லது நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முன் நேரில் நேர்காணல் / கலந்துரையாடலின் மூலம் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, ‘பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்’ கீழ் தமிழ்நாட்டில் 9 கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில்’ தமிழ்நாட்டிற்கு ரூ.45.9 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply