தமிழக அரசு, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படுவதை தடுக்கும் விதமாக, மிரட்டல் விடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டுஅதிகபட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படுவதை தடுக்கும் விதமாக, மிரட்டல் விடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, சட்டத்திற்கு உட்பட்டு அதிகபட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு, பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் சமீப காலமாக சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்களால் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்றாலும் தொடர்ந்து பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வருகின்றன.

சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு தற்போது 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் டி.ஜி.பி பெயரில் போலியான இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலியான இ-மெயில் என்றாலும் அதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து மிரட்டல் கடிதம் வராமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வருவதால் விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும், நிர்வாகத்தினரும் அச்சம் அடைகின்றனர். கற்றல் கற்பித்தலில் தடை ஏற்படுகிறது.

எனவே தமிழக அரசு பள்ளிகளுக்கு வரும் வெடி குண்டு மிரட்டல் சம்பந்தமாக தனிக்கவனம் செலுத்தி கண்காணிப்பு, விசாரணை ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, சட்டத்திற்கு உட்பட்டு அதிகப்பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் தமிழக அரசு, இனிமேல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வராமல் இருக்க உரிய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply